ரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுக்கும் 3 இயக்குனர்கள்.! உச்சகட்ட கொடூரத்தில் தனுஷ் படம்..

tamil directors
tamil directors

Tamil Directors: தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்திற்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

எனவே இதனால் தமிழ் சினிமாவிற்கு நல்ல லாபம் கிடைத்த நிலையில் இதனை அடுத்து இந்த வருடமும் இதே அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த வருடம் தொடர்ந்து தனுஷ், விஜய், கமல், ரஜினி, அஜித், சூர்யா போன்ற அனைத்து முன்னணியின் நடிகர்களின் திரைப்படங்களும் அடுத்தடுத்த ரிலீஸ் ஆக உள்ளது.

விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு.. கலைஞர் 100 விழாவில் பங்கமாய் அவமானம்.. தீராத வன்மத்தில் திரை துறையினர்..

மக்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்து வரும் நிலையில் இவ்வாறு ஒரு படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் இயக்குனர்களாகவே இருந்து வருகின்றனர். அதன்படி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ஒரு சில இயக்குனர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் ஒரு சில ரத்த களரி உடன் பயங்கரமாக படத்தை இயக்கி வருகின்றனர். அப்படி தமிழ் சினிமாவின் டாப் 3 இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம்.

வெற்றிமாறன் :

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவ கதைகள் போன்ற திரைப்படங்களை தந்து வந்த வெற்றிமாறன் கடந்த வருடம் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலைப் படத்தின் முதல் பாகத்தை இயக்கியிருந்தார். பொதுவாக வெற்றிமாறனின் படத்தில் படம் முழுவதும் ஆக்ஷன் இல்லை என்றாலும் வர ஒரு சில ஆக்ஷன் காட்சிகள் மிகவும் வன்முறையாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். அதேபோல் வெற்றிமாறனின் குருநாதர் பாலு மகேந்திரா ஒரு பெட்டியில் மிகவும் வன்முறையாக இருப்பதனை சுட்டிக்காட்டி இருப்பார்.

லோகேஷ் கனகராஜ் :

தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக இருக்கும் லோகேஷ் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கைதி, விக்ரம், லியோ படத்தின் வெற்றினை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 171வது படத்தினை ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளார்.

வெங்கட் பிரபு பிடியில் சிக்கிய விஜய்.! எதிர்கால தலைவர் ஆசை இருக்கிற நீங்க இப்படி பண்ணலாமா தளபதி..?

இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் பெண்கள் கொல்வதை புகழ்ந்துரைக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி லோகேஷின் மனநிலையை ஒருவர் உளவியல் பரிசோதனை செய்யக்கோரி மனு கொடுத்திருந்தார்.

அருண் மாதேஸ்வரன் :

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தினை இயக்கியிருக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான ராக்கி, சாணி காகிதம் இரண்டு படங்களுமே ரத்த களரிவுடன் அமைந்ததால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் ஏ சர்டிபிகேட் கொடுக்க முடிவு செய்தனர் ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் நான்கு நிமிடங்களை கட் செய்ததால் U/A சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது.