பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மூன்று நடிகைகள் தற்போது குழந்தை வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் சீரியலில் நடிக்கும் நடிகைகள் கர்ப்பமாகி விட்டால் உடனே அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை மாற்றிவிடுவார்கள்.
இதன் காரணமாகவே குழந்தை பெற்றுக் கொள்ள பெருமளவு போராட்டத்தையும் மன உளைச்சலையும் சந்தித்த பிரபல வில்லி நடிகைகள் தங்கள் குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
நடிகை நீலிமா ராணி இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மலையாளம் என பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நமது நடிகை தமிழில் மெட்டி ஒலி கோலங்கள் வாணி ராணி ஆகிய சீரியல்கள் மாபெரும் வெற்றி கண்டது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடைசியாக அரண்மனைக்கிளி என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த நமது நடிகை யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏகப்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்து வைத்திருந்தார். இந்நிலையில் நமது நடிகை கர்ப்பம் ஆக இருப்பது மட்டுமில்லாமல் அவருக்கு ஜனவரி 2022ல் குழந்தை பெறப் போவதாகவும் தெரியவந்துள்ளது.
நடிகை ஜெனிஃபர் இவர் தமிழ் சினிமாவில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான முத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவருக்கு 2007ஆம் ஆண்டு திருமணமாகியது மட்டுமில்லாமல் தற்போது குஷ்புவின் லட்சுமி ஸ்டோர் என்ற சீரியலில் கமலா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நமது ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது குழந்தை வரவேற்புக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
பரீனா ஆசாத் இவர் திரை உலகில் முதன்முதலாக சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தான் சின்ன திரையில் அறிமுகமானார் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது இதனை தொடர்ந்து அவர் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும்கூட பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகாமல் இன்றுவரை நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஓரிரு நாட்களில் குழந்தை பிறக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.