குட்டி நயன்தாராவை கசக்கிப் பிழிந்த “தமிழ் ராக்கர்ஸ்” படக்குழு – ஹீரோவுடன் சொல்லி புலம்பல்..

vani-bojan
vani-bojan

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் இழுத்து வரப்பட்டவர் வாணி போஜன். இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என கூப்பிடுவார்கள. மேலும்  ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் தனது திறமையையும் எடுத்த உடனேயே வெள்ளித்திரை பக்கம் காட்டியதால் இவருக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக குவிய தொடங்கியது.

முதலில் ஒரு இரவு என்ற படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பின்னர் நடிகை வாணி போஜன் ஒ மை கடவுளே, லாக்கப், ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும், மகான் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இந்த வருடத்தில் கூட இவருக்கு இன்னும் ஏழு எட்டு திரைப்படங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், மிரல் நவீன் சந்திராவுடன் ஒரு படம், லவ், ஊர் குருவி, கொலைகார கைரேகைகள் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனால் நடிகை வாணி போஜனின் மார்க்கெட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் சினிமாவையும் தாண்டி வெப் சீரிஸ் பக்கத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இப்போ அருண் விஜய் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “தமிழ் ராக்கர்ஸ்” என்ற என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதை அறிவழகன் இயக்கி உள்ளார் முதல் முறையாக ஏவியம் நிறுவனம் வெப் சீரியஸை தயாரித்துள்ளது இந்த படம் பற்றி சமீபத்தில் வாணி போஜன் பேசியது சூட்டிங் சாதாரணமாக ஆறு மணி வரை இருக்கும் சில சமயம் அது 10 மணியாகும் ஆனால் தமிழ் ராக்கர்ஸ் ஷூட்டிங்கில் அப்படி கிடையாது விடிய விடிய சூட்டிங்  பண்றாங்க..

இயக்குனரும், ஹீரோவும் டயர்ட்டாக மாட்டேங்குறாங்க காலை 7 மணிக்கு ஆரம்பித்து ஷூட்டிங் விடிய விடிய நடந்து மறுநாள் காலை 7:00 மணிக்கு முடியுது நான் ஹீரோவிடம் கேட்டேன் நீங்கள் போனீங்கன்னா நானும் பின்னாடியே கிளம்புறேன் நீங்க போக மாட்டேங்கிறீங்க நானும் இங்கேயே இருக்கிறேன் என அருண் விஜயிடம் வேதனையுடன் குட்டி நயன்தாரா சொன்னாராம்.