ரசிகர்களுக்கு ஒரு நடிகரை பிடித்து விட்டால் அவரை உச்சத்தில் தூக்கி வைத்து அழகு பார்ப்பது வழக்கம். அந்த நடிகர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து விட்டால் அவரை நீண்ட காலமாக உச்சியில் வைப்பார்கள்.
இருந்தாலும் அந்த நடிகரை மறுபக்கம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை குறை கூறுவதும் நடக்கிறது. அந்த வகையில் தல அஜித் தமிழ் சினிமாவில் வெற்றி தோல்வி படங்களை கொடுத்தகொடுத்தாலும் அவரை உச்சத்திலேயே தான் இருக்கிறார் ஆனால் இவரை தொடர்ந்து பலர் விமர்சிக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது தமிழ் தயாரிப்பாளர்கள் பலரும் விமர்சிக்கின்றனர் ஏனென்றால் தற்போது அஜித் போனி கபூர் உடன் இணைந்து 3-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதால் தயாரிப்பாளர்கள் நெருக்கடியை சந்தித்து உள்ளனர்.
அஜித் ஒரு இயக்குனர் அல்லது தயாரிப்பாளருக்கு பிடித்து விட்டால் தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளித் தருவதால் மற்ற இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மன வேதனைக்கு உள்ளாகின்றனர்.
தமிழில் இருந்து கொண்டே தமிழ் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் வட மாநில தயாரிப்பாளருக்கு வழங்குகிறார் என்று குறை கூறுகின்றனர் ஆனால் இதற்கு முன்பு சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
மேலும் தமிழில் பல இளம் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் வளர்த்து விட்டவர் அஜித் என்பது யாரும் மறுக்க முடியாது.
இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் வெற்றி கொடுக்கும் பொது தங்கமாக தெரிந்த அஜித் தோல்வி கொடுக்கும்போது அவரையே விமர்சித்ததால் அவர் இப்பொழுது அவர் எளிதில் ஒரு இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க தயங்குகிறார் என கூறப்படுகிறது.
இந்த செய்திகள் அஜித் தனது காதில் போட்டுக்கொள்ளாமல் தனது வேலையை செய்து வருகிறார்.