Leo Movie Update: விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி இருக்காது என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருப்பது ஆக லியோ படக் குழுவினர்கள் தெரிவிக்க விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தினமும் ஐந்து காட்சிகளை திரையிட தியேட்டர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதிகாலை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் டைமிங் உள்ளிட்ட தகவல்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் சிறப்புக் காட்சி அனுமதிக்கப்படாது எனவும் 18ம் தேதியே மாலை, இரவுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என தெரிவித்திருந்தனர். ஏனென்றால் இதற்கு முன்பு லியோ டிரைலரில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததால் அதனை நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் ரோகிணி தியேட்டரில் லியோ படத்தின் டிரைலர் வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் 400க்கும் மேற்பட்ட இருக்கைகளை நாசம் செய்தனர். எனவே இதன் காரணமாக ரோகினி நிர்வாகத்திற்கு 10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது ஆனால் ரோகினி நிர்வாகம் ரசிகர்களின் மீது எந்த ஒரு கேசும் கொடுக்கவில்லை.
அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு லியோ படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியான நிலையில் அதில் விஜய் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்ததால் இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு மத்தியில் லியோ படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து வருகின்றனர்.