உலகம் முழுவதும் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது, அதனால் இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள், அதே போல் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வராமல் இருப்பதற்காக பல்வேறு திரையரங்குகள் மால்கள், ஏசி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும் வெளிமாநிலத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று வராமல் இருப்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது தமிழக அரசு, அதுமட்டுமில்லாமல் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக எங்கும் செல்லக்கூடாது கூட்டம் சேர்க்க கூடாது என மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், போக்குவரத்து என அனைத்தும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் மதுக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொரோனோ வைரஸ் தமிழகத்தில் வராமல் இருப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது அதற்க்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.