தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துவரும் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்களுடைய திரைப்படங்கள் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதாவது அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் நாளை மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வந்த நிலையில் அதிகாலை காட்சிகள் திரையிடத்திட்டமிட்டு இருந்த நிலையில் தற்பொழுது அந்த அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது எனவே தமிழக உத்தரவால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியை அடைந்து உள்ளார்கள்.
இந்நிலையில் சற்று முன்பு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் உயரமான பேனர்கள் வைக்க கூடாது எனவும் பாலாபிஷேகம் செய்யவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. எனவே ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதி இரு நாட்கள் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அதிகாலை ஒரு மணிக்கும், விஜயின் வாரிசு அதிகாலை ஐந்து மணிக்கு சிறப்பு திரையிட இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
இதனை அடுத்து இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல வருடங்கள் கழித்து ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் நிலையில் எந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெறுமென்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது இதனை அடுத்து விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையினையும், அஜித்தின் துணைவு திரைப்படம் பேங்க் கொள்ளை மையமாக வைத்து ஆக்சன் திரில்லர் படமாகவும் உருவாகி இருக்கிறது.