‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படம் ஆஸ்கர் விருதை வென்ற நிலையில் இயக்குனருக்கு ரொக்க பரிசளித்த தமிழக முதல்வர்.! எத்தனை கோடி தெரியுமா.?

The-Elephant-Whisperers

சென்ற வாரம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் அதில் தமிழ் இயக்குனர் ஆஸ்கர் விருது பெற்றார் எனவே அதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ரொக்க தொகையை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவா அது சமீபத்தில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது அதில் ஏராளமானவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

அப்படி ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற தமிழ் ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் யானை குட்டி பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினர் நடித்திருந்த நிலையில் இந்த படத்தினை இயக்குனர் கார்த்திகி என்பவர் இயக்கியிருந்தார்.

karthiki 2
karthiki 2

இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதை வென்ற நிலையில் தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்தது எனவே பலரும் இயக்குனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்பொழுது தமிழக முதல்வர் அவர்கள் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண படத்தினை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்கு ரூபாய் ஒரு கோடி ரொக்க பரிசை அளித்துள்ளார்.

karthiki

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் ஒரு கோடி ரூபாய் காண காசோலை முதல்வர் ஸ்டாலினிடமிருந்து இயக்குனர் கார்த்திக்கி பெற்றுக்கொண்டார். மேலும் இதற்கு முன்பு இந்த படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களை சந்தித்து முதல்வர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

karthiki 1

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது ஆஸ்கர் விருது வென்ற கார்த்திகி நேற்று இந்தியா திரும்பிய நிலையில் இன்று அவரை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கூறி சான்றிதழையும் ஒரு கோடி ரூபாய் காசோலையையும் வழங்கிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.