இந்த வாரம் ஜெயிலரை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்..

JAILER
JAILER

Tamil Movies: வாரம் தோறும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்கும் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆவாது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்ட நிலையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மேலும் ஜெயிலரை படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படங்களில் லிஸ்ட்டை தற்பொழுது பார்க்கலாம்.

1. ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த வெற்றினை தொடர்ந்து ஜெயிலர் படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

2. லவ்: பரத், வாணி போஜன் இணைந்து நடித்திருக்கும் லவ் படத்தினை ஆர்.வி.பாலா இயக்கிய நிலையில் இந்த படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது. லவ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

3. நாயாடி: காதம்பரி ஆதர்ஷ், மதிக்காந்தம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் நாயாடி என்ற படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாக உள்ளது.

4. ஹட்டி: அனுராக் காசியம், நவாசுதீன் சக்தி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹட்டி திரைப்படம் ஜீ 5 தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த நேரடி டிஜிட்டல் திரைப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் உருவாகியுள்ளது.

மேலும் இந்த படங்களை தொடர்ந்து ‘ஷவம்’ என்ற மலையாளப் படம் ஐஸ்ட்ரீம் ஓடிடியிலும், ‘விவாஹா அவஹனம்’ என்ற மலையாள திரைப்படம் மற்றும் ‘உரு’ என்ற மலையாள திரைப்படம் ஹெச்.ஆர் ஓடிடியிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.