அந்தக் காலம் இந்தக் காலம் மட்டும் இன்றி எக்காலத்துக்கும் பாடம் புகட்டிய தமிழ் திரைப்படங்கள்..!

movies
movies

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த திரைப்படத்தின் கதை மட்டும் நடிகர்களின் நடிப்பு ஆகிய இரண்டும் தான்.  அந்த வகையில் எக்காலத்துக்கும் பொருந்தும் திரைப்படமாக அமைந்த சில திரைப்படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

எங்கள் வீட்டுப்பிள்ளை திரைப்படம் ஆனது 1965 ஆம் ஆண்டு புரட்சித்தலைவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சாணக்கியது மட்டும் இல்லாமல் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இதில் எம் ஜி ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அசத்தி இருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நான் ஆணையிட்டால் மற்றும் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே ஆகிய பாடல்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பாடலாக அமைந்தது அது மட்டும் இல்லாமல் இதில் ஒரு எம்ஜிஆர் கோழை என்றால் மற்றொரு எம்.ஜி.ஆர் வீரம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் முழுவதும் ரசிகர்களை தூங்க விடாமல் ஆர்வத்தை மூட்டியது மட்டுமில்லாமல் எக்காலத்துக்கும் பொருந்தும் கதை அம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்தது.

நாடோடி மன்னன் இந்த திரைப்படமும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படத்தை எம்ஜிஆர் அவர்களே தயாரித்தும் இயக்கியும் உள்ளார் அது மட்டும் இல்லாமல் எஸ் எம் சுப்பையா நாயுடு என்பவர் இசையமைத்துள்ளார் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் மனிதர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைந்தது என்றே சொல்லலாம்.

படிக்காத மேதை பொதுவாக படிக்காத சிலர் என்றும் புத்திசாலியில் தனமாக வாழ்க்கையை உச்சத்திற்கு சென்றுள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் படிக்காத மேதையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் சிவாஜி இவர் இந்த திரைப்படத்தின் கதை தற்காலத்துக்கும் ஏற்றார் போல் இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது.

தர்மதுரை இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகன் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பணம் வந்தால் ஒருவருடைய குணம் எந்த அளவிற்கு மாறுபடுகிறது மேலும் சட்டத்திற்கு புறம்பான செயலை செய்யும் பொழுது அவருடைய அந்தஸ்து எந்த அளவிற்கு உயர்கிறது என்பதை மிகவும் தெளிவாக இந்த திரைப்படத்தில் காட்டியது மட்டுமில்லாமல் வாழ்க்கை என்றால் என்ன என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் மிகத் தெளிவாக காட்டி இருப்பார்.

மகாநதி இந்த திரைப்படம்  கமல் மற்றும் சுகன்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் அந்த வகையில் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது தம்மை அறியாமல் பலர் அழுவது உண்டு அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதை மிகச் சிறப்பாக அமைந்தது மட்டுமில்லாமல் இளையராஜாவின் இசை இந்த திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றது.