Tamil movies that ran for 365 days in theatres: தற்பொழுதெல்லாம் சினிமாவில் இளம் நடிகர்களின் திரைப்படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என தொடர்ந்து அடுத்தடுத்து திரையரங்களில் வெளியாகி வருகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் திரைப்படங்களுக்கென இருக்கும் மவுசு மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் 80, 90களில் வரும் படங்களை ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வந்தனர். ஆனால் தற்பொழுது அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வாறு 365 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்குகளில் கல்லாக் கட்டிய நான்கு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
சத்தமே இல்லாமல் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா..! இதுல உள்குத்து இருக்குமோ..
சின்னத்தம்பி: பி வாசு இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு பிரபு, குஷ்பூ, மனோரமா மற்றும் ராதா ரவி போன்றோர்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் சின்னத்தம்பி. இப்படத்தில் பிரபு-குஷ்புவின் காதலையும் பிறகு இவர்களுடைய வரட்டு கவுருவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை அழகாக காண்பித்து இருப்பார்கள். இவ்வாறு சின்னத்தம்பி படம் 365 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்குகளில் சாதனை படைத்தது.
மூன்று முடிச்சு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி, ரஜினி மூவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் மூன்று முடிச்சு. இப்படத்தில் ஒரே ரூமில் கமல் மற்றும் ரஜினி நண்பர்களாக இருக்க அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஸ்ரீதேவியின் மீது இவர்களுக்கு காதல் ஏற்படும் எனவே அவரிடம் தங்களை நல்லவர்கள் போல் காண்பித்து நடிக்க ஆனால் ரஜினி தன்னை கெட்டவனாக காண்பித்து நடித்திருப்பார்.
மூன்றாம் பிறை: பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி, கமல் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஸ்ரீதேவிக்கு பழைய ஞாபகமாக மறந்து போக கமல் அடைக்கலம் கொடுத்திருப்பார். இவர்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாற இந்த சமயத்தில் ஸ்ரீதேவிக்கு பழைய ஞாபகங்கள் வந்ததால் கமலை விட்டு பிரிந்து விடுவார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அருமையாக அமைந்ததால் வசூல் ரீதியாக, விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட் வெற்றினை பெற்று இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.
கரகாட்டக்காரன்: இப்படத்தின் கதைகளம் மட்டுமல்லாமல் பாடல்களும் மிகவும் அருமையாக இருந்ததால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் கிராமத்து மக்களின் மனதை பெரிதளவிலும் கவர்ந்தது. இப்படத்தை கங்கை அமரன் 1989ஆம் ஆண்டு இயக்க ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் வெளியானது. இவ்வாறு ராமராஜன் இப்படத்தின் மூலம் கிராமத்து நாயகனாக மக்கள் மனதை கவர்ந்தார். 33 வருடங்களுக்கு பிறகும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை.