தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றன ஆனால் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிகின்றதா என்றால் அது கேள்விக்குறி தான் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைக்கும்..
அந்த வகையில் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய தமிழ் திரைப்படங்கள் எது என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.. 1. ரஜினி நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடியது தமிழை தாண்டி இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலை அள்ளியது இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
2. நான்கு வருடங்களுக்கு பிறகு கமல் ரீ என்ட்ரி கொடுத்து நடித்த திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் ஒட்டுமொத்தமாக 410 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை.
3. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் பிகில் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பியது இந்த படம் வசூலில் 300 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
4. அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படம் ஒரு வரலாற்று நாவல் கதை என்பதால் ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர் அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இந்த படம் குறைந்த நாட்களிலேயே 300 கோடியை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.