Tamil Movies: தொடர்ந்து வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் அதே நாளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் ஓடிடி வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
அப்படி இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான சில திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து பார்க்கலாம். அஸ்வின் நடித்த ‘பீட்சா 3’ என்ற படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்களில் வெளியான நிலையில் இந்த வாரம் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் ராஜ் மற்றும் தீக்ஷி நடித்த ‘பிளாக் அண்ட் ஒயிட்’ திரைப்படம் ஜீ தமிழ் வழியாக உள்ளது. இந்த இரண்டு தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இந்த இரண்டு படங்களை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பேபி’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியிலும், பருந்து என்ற தெலுங்கு படம் ஈடிவி ஓடிடியிலும், சீதா பலகிருஷ்ணா என்ற தெலுங்கு படம் ஹங்மா பிளே என்ற ஓடிடியில் வெளியாக உள்ளது.
மேலும் கிருக்கன் என்ற மலையாள படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியிலும், மதுர மனோகரா மோகம் என்ற மலையாள படம் HR ஓடிடி, புரோ தி அவதார் என்ற தெலுங்கு படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியிலும் வெளியாக உள்ளது.