Tamil Movies Release Update: வாரம் தோறும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டு வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் படங்கள் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
ரசிகர்களும் படங்களை கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது லியோ படத்துடன் அக்டோபர் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ வருகின்ற 19ஆம் தேதி அன்று வெளியாகிறது.
லியோ படம் வெளியாகும் அதே நாளில் ஷிவாவின் கோஸ்ட் மற்றும் டைகர் நாகேஸ்வரராவ் போன்ற படங்கள் வெளியாகிறது. இதனை அடுத்து அக்டோபர் 20ஆம் தேதி மார்கழி திங்கள் படமும் வெளியாக உள்ளது.
லியோ: நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தினை லலித் குமார் தயாரித்துள்ளார் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
கோஸ்ட்: சிவராஜ்குமார், ஜெயராம் இணைந்து நடித்திருக்கும் கோஸ்ட் படத்தை எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார். இப்படம் அதிரடி திரில்லர் படமாக உருவாகி இருக்கும் நிலையில் லியோ படம் ரிலீஸ் ஆகும் அது 19ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
டைகர் நாகேஸ்வர ராவ்: அனுபம் கெர், ரவி தேஜா, முரளி வர்மா ஆகியோர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படம் 1970களில் ஆந்திர பிரதேசத்தின் ஸ்டூவர்ட்புரத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜ வாழ்க்கை கொள்ளைக்காரனான டைகர் நாகேஸ்வரராவ் காவல்துறை மற்றும் சிறைச்சாலையை தவிர்க்கும் அவரது புத்திசாலித்தனமான வழிகளை வைத்து உருவாகி இருக்கிறது. இப்படமும் 19ஆம் தேதி தான் வெளியாகிறது, டைகர் நாகேஸ்வரராவ் படத்தினை வம்சி இயக்கியுள்ளார்.
மார்கழி திங்கள்: மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படம் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.