தேசிய விருது லிஸ்ட்டில் இருக்கும் தமிழ் திரைப்படங்கள்.! யாருக்கு கிடைக்கும்

Surya
Surya

2021 இல் வெளியான தமிழ் திரைப்படங்கள் பல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் தேசிய விருதிற்கும் தேர்வாகியுள்ளது அதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது இந்த லிஸ்டில் உள்ள தமிழ் திரைப்படங்கள் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

1. ஜெய் பீம் : டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் முழுக்க முழுக்க பின்படுத்துவர் மக்கள் எப்படி இந்த சமூகத்தில் கஷ்டப்படுகிறார்கள் என்பதை காட்டியிருந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், லி ஜோமல்  ஜோஷி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கினர்.

2. கர்ணன் : பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் ஒரு கிராமமே சாதியை காரணமாக வைத்து ஓடுக்கப்படுவதை காட்சிப்படுத்து இருப்பார்கள் படத்தில் தனுஷ் உடன் இணைந்து ரஜிஷா விஜயன், லால், கெளரி கிஷன், லட்சுமி பிரியா, நடராஜன் என பலர் நடித்திருந்தனர்.

படத்தின் காட்சிக்கு ஏற்றார் போல இசை பாடல்கள் சிறப்பாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படத்தின் இயக்குனருக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தனுஷுக்கு கிடைக்கலாம் எனவும் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

சார்பட்டா பரம்பரை  : ரஜினியை வைத்து காலா, கபாலி படங்களை இயக்கி வெற்றிகொண்ட பா. ரஞ்சித்  ஆர்யாவை வைத்து சார்பாக பரம்பரை என்னும் படத்தை எடுத்தார் படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஆர்யாவுடன் கைகோர்த்து துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் ஜான் கொக்கன், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்காக நிச்சயம் சிறந்த நடிகருக்கான விருது ஆர்யாவுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

விநோதய சித்தம் : சமுத்திரகனி இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த திரைப்படம் தேசிய விருது லிஸ்டில் உள்ளது தம்பி ராமையா, யுவலட்சுமி, ஸ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

மாநாடு : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது. இந்த படத்தில் சிம்பு எஸ்.ஜே சூர்யா போன்றவர்கள்  நடிப்பு சிறப்பாக இருந்தது எனவே இவர்களுக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.