சினிமா உலகில் நடிக்க வந்த புதிதில் அவமானப்பட்ட நடிகர்கள் பலரும் இன்று உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் நடிக்கும் போது இது எல்லாம் ஒரு மூஞ்சா. இவன் ஹீரோவா என கூறி பலரும் அவரை அவமானப்படுத்தினார்கள் ஆனால் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் ஒரு மிகப்பெரிய ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் கேஜிஎப் போன்ற ஒரு படம் உருவாக..
இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் 1,2 போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் மூன்றாவது பாகமும் உருவாக இருக்கிறது இந்த நிலையில் கே ஜி எஃப் படம் போன்று சமீபகாலமாக பல படங்கள் உருவாகி வருகின்றன அண்மையில் கூட நானே நடிப்பில் உருவான தசரா திரைப்படம்.
தங்க சுரங்கத்திற்கு பக்கத்தில் வாழ்வும் மக்களை மையமாக வைத்து உருவாகி இருந்தது அதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படமும் கேஜிஎப் பானியில் தான் உருவாகிறதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் பேட்டி ஒன்றில் கூறியது கே ஜி எஃப் பாணியில் வெற்றிமாறன் ஒரு கதை இயக்க உள்ளாராம்.?
அதில் தனுஷ் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார். அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.