சரியாக ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படம் எது என்ற ரசிகர்களின் கேள்விக்குபிரபல இயக்குனர் பதிலளித்துள்ளார் அதாவது அவர் கூறியதாவது அட்லியின் மெர்சல் என்ற திரைப்படம்தான் சரியாக ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் என கூறியுள்ளார் இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் அட்லி இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதனைத் தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து இயக்கினார். இதில் மெர்சல் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகியது.
மெர்சல் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் சத்யராஜ், வடிவேலு நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் வடிவேலு அவர்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்த திரைப்படமாக அமைந்தது. மேலும் மெர்சல் திரைப்படம் வெளியாகிய ரசிகர்களிடம் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது.
அதாவது கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தின் அட்ட காப்பி என பலரும் விமர்சனம் செய்தார்கள். இந்தநிலையில் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் இரண்டாவது பாகம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய cs அமுதன் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பவர் அந்த வகையில் தற்போது ரசிகர் கேட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் ஒரு ரசிகர் மிக சிறப்பாக ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் என்றால் எந்த திரைப்படம் என கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த சி எஸ் அமுதன் மெர்சல் என பதிலளித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லீயை பங்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் சிஎஸ் அமுதன் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் cs அமுதன் தற்பொழுது விஜய் ஆண்டனி நடித்து வரும் ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தில் இருக்கிறது விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
Ungala porutha varikkum proper ha Tamil la remake panna padam edhu?
— தனன் த.வ. (Dhanan D.V.) マサノリ (@dhananstonks) May 6, 2022