இந்திய சினிமாவில் வருடத்திற்கு 1000 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகின்றன ஆனால் அவை அனைத்தும் வெற்றி பெறுகின்றன என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நல்ல கதை உள்ள திரைப்படங்கள் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவு முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது.
அதேபோல் சமீபகாலமாக தமிழ் சினிமா வசூலில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது, ஏனென்றால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஒரே ஒரு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வரை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமாவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.
எந்திரன் 289 கோடி, விஸ்வரூபம் 220 கோடி, விக்ரமின் ஐ 240 கோடி, பாகுபலி தி பிகினிங் 600 கோடி, கபாலி 286 கோடி பாகுபலி இரண்டாம்பாகம் 1500 கோடி மெர்சல் 250 கோடி பிகில் 300 கோடி. எனவே இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி வசூலில் பயணிக்கும் என தெரிகிறது.