சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் பெரும்பாலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பது உண்டு. அந்த வகையில் 80, 90 காலகட்டங்களில் தொடங்கி இப்பொழுது வரையிலும் பல நடிகர்கள் வில்லன், ஹீரோ, போலீஸ் என பல விதமான கெட்டப்புகள் போட்டு நடித்துள்ளனர்.
குறிப்பாக போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் வளர்த்துக் கொண்ட நடிகர்கள் ஏராளம் எம்ஜிஆர், சிவாஜி, அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல் எனத் தொடங்கி இளம் நடிகர்களான சிம்பு, அதர்வா போன்றவர்கள் வரை போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
நல்ல போலீஸ் கதை அம்சமுள்ள திரைப்படங்கள் இப்பொழுது கிடைத்தாலும் தயங்காமல் நடிக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரம் என்றாலே அந்த படங்களில் நடிப்பதை தவிர்க்கின்றனர். அப்படி இருக்கும் ஒரு சில நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
நடிகர் தனுஷ் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து தேசியவிருது எல்லாம் வாங்கி அசத்தி உள்ளார் ஆனால் இவரது உடல் வாட்டத்திற்கு சுத்தமாக போலீஸ் கதாபாத்திரம் சரிப்பட்டு வராது என்ற காரணத்தினால் போலீஸ் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட கதைகளை முற்றிலுமாக தவிர்த்து வருகிறாராம்.
தனுஷை தொடர்ந்து 80 90 காலகட்டங்களில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தவிர்க்கமுடியாத ஒரு நாயகனாக ஓடியவர் மைக் மோகன் இவர் இதுவரை போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த தகவல்களே இல்லை. காமெடி நடிகர் சந்தானம், நடிகர் ஜீவா போன்ற நடிகர்கள் இதுவரை பெரிய அளவு போலீஸ் யூனிபார்ம் போட்டு படங்களில் நடித்தது கிடையாது என்ற தகவலும் வெளிவருகின்றன.