கிண்டலும் கேலியும் செய்தவர்களை வியக்கவைத்த தமிழச்சியின் கதை.!

air plane
air plane

ஆர்வமும் லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்து உள்ளவர் மதுரையைச் சேர்ந்த காவியா. தற்பொழுது இவர் விமான பயிற்சியாளராக உள்ளார். இவர் சிறுவயதில் இருந்து விமானம் ஓட்ட ஆசைப்பட்டவர் காவியா. இதனை இவர் நிஜமாக நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் ஏனென்றால் தற்பொழுது இவர் விமானம் ஓட்டி வருகிறார்.

சாதாரணமான குடும்பத்தில் பிறந்த காவியா விமான ஓட்டுவதில் தீராத காதல் இருந்தது. இருப்பினும் அதற்கான சரியான படிப்பை தேர்ந்தெடுக்காமல் மாறுபட்ட துறையை தேர்ந்தெடுத்தார். காவியா 2013ம் ஆண்டு 12 ம் வகுப்பு முடித்ததும், பெங்களூரில் உள்ள ஜக்கூர் விமான பயிற்சி நிறுவனத்தில் சேருது விமானம் ஓட்ட பயிற்சி எடுத்தவர்.

படிப்புக்காக அவரது தந்தை தனது எல்லையை மீறி கடன் வாங்கியதாகவும் குறிப்பிடுகின்றனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள் பெண் பிள்ளைக்கு ஏன் இந்த படிப்பு என கேலி செய்த நிலையில் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் தன் லட்சியத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படித்து உள்ளவர்.

பெங்களூருவில் படித்து பயிற்சி பெற்றபின் விமானம் ஓட்டுவதில் இரண்டு விமானிகளில் ஒரு ஓட்டுநர் காவியா.இது மட்டுமில்லாமல் தனியாக ஒரு விமானத்தையும் இயக்கியுள்ளார்.

இதன் பின் லைசென்ஸ் கிடைத்ததும், பயிற்சியாளராக மாறியுள்ளார்.