பாரபட்சமின்றி அப்பா மகன் என இருவருடனும் திரைபடத்தில் டூயட் பாடிய ஐந்து நடிகைகள்..!

sivaji-1
sivaji-1

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகள் முதலில் மூத்த நடிகர்களுடன் ஜோடி போட்ட திரைப்படத்தில் நடித்து விட்டு அதன் பிறகு அவருடைய மகனுடன் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள் அந்த வகையில் இவ்வாறு நடித்த ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வரும் நடிகைகளுக்கு மவுசு என்றால் ஏழு முதல் பத்து வருடங்கள் தான் அந்த வகையில் அவர்கள் எப்படி சம்பாதிக்க முடியுமோ அந்த வகையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டி தான்.

நடிகை அம்பிகா சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த சிவாஜிகணேசனுடன் வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மட்டுமில்லாமல் சிவாஜி கணேசனின் மகன் பிரபு உடன் வருங்கால தூண்கள் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ambika-1
ambika-1

நடிகை ராதா இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் முதல் மரியாதை இந்த திரைப்படத்தில் ராதா சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபு உடன் ஆனந்த் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை லட்சுமி சிவாஜிகணேசனுடன் நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார் அதேபோல ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டாம் ஆண்டு என் உயிர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மகன்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி உடன் கைதி நம்பர் 150 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் அவருடைய மகன் ராம்சரணுடன் மாவீரன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் சிரஞ்சீவியுடன் நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் அதேபோல இவருடைய மகன் ராம்சரணுடன் ரச்சா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.