Jailer : ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலகம் எங்கும் வெற்றி நடை கண்டு வருகிறது. 14 நாட்கள் முடிவில் உலக அளவில் சுமார் 550 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை எதிர்த்து எந்த ஒரு படமும் வெளியாகாததால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வசூலுக்கு முடிவு கட்ட அடுத்தடுத்த படங்கள் வெளிவர உள்ளன.
கிங் ஆப் கொத்தா : மலையாள நடிகரான துல்கர் சல்மான் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இந்தியாவில் பிரபலம் அடைந்துள்ளார் இவர் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆப் கொத்தா திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார் மேலும் ரித்திகா சிங் கவர்ச்சி நடனமாடியுள்ளார் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கின்ற நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
அடியே : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஓடிக்கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் இவர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த படத்தில் ஹீரோயின்னாக கௌரி கிஷன் நடித்துள்ளார்.
பார்ட்னர் : திருமணத்திற்கு பிறகு ஆதி நடித்துள்ள திரைப்படம் பார்ட்னர் அவருடன் இணைந்து ஹன்சிகா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தை மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார் படம் வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஹர்காரா : ராம் அருண் கேஸ்ட்ரோ நடித்து இயக்கியுள்ள இந்த திரைப்படம் இந்தியாவின் முதல் தபார்காரரை பற்றி சொல்லும் ஒரு படமாக இது உருவாகியுள்ளது இந்த படத்தில் காளி வெங்கட் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் படம் வருகின்ற 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.