தற்கொலை செய்துகொண்ட தமிழ் திரை பிரபலங்கள்.! இதோ முழு விவரம்

தமிழ் திரை உலகில் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் இரண்டு மூன்று படங்களில் நடித்தாலே செல்வ செழிப்பாக வாழலாம் என்ற நிலை இருந்தபொழுது சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் எந்தவித அறிவிப்பும் அறிவிக்கவில்லை.

இது திரைத் துறையில் மட்டுமின்றி வெளித்திரைகளும் இதன் பாதிப்பு வெளிப்பட்டன. இதனால் அச்சமடைந்த புதுமுக நடிகர்கள் திரைத்துறையில் நடிக்க பயந்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட சில நடிகர்களின் படம் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றன. மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

1.திரை உலகில் இன்னும் பல ரசிகர்களை கொண்டவர் சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா தமிழ் திரை உலகில் தோன்றி பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது கவர்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் மிக வெகுவாக கவர்ந்தது. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் கொடிகட்டி பறந்தவர் இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ம் நாள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தன.

இச்செய்தியைக் கேட்டு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். இவர் தற்கொலை இன்றளவிலும் மர்மமாகவே உள்ளது.இவரது நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்பட்ட மூன்றாம் பிறை, ராக தாளங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் சில்க்ஸ்மிதா.

2. சபர்ணா பல படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக படத்திலும் நடித்து வந்தார் இவர் இதுமட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் நடித்து வந்தார். இந்தநிலையில் அவரது காதலனுடன் லிவிங்டுகெதரில் வாழ்ந்து வந்த இதனிடையில் அவர் காதல் பிரிவின் காரணமாக தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் குறிப்பாக பூஜை மற்றும் மீகாமன் போன்ற படங்களாகும்.

3. சிம்ரனின் தங்கை மோனல் அவர்கள் சில திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் இவர் கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்கள் மற்றும் மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் .திரை வாழ்வில் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையல் இவர் தனது தனிப்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் வாடினர்.

4.காதலர் தினம் படத்தின் மூலம் மக்களின் ஆதரவையும் மற்றும் ரசிகர்களையும் பெற்றவர் குணால் சிங். இவருக்கென்று இப்படத்தின் மூலம் பெண் ரசிகர்கள் அதிகம் பெற்றவர் என உங்களுக்கே தெரியும். திரைப்படங்களின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2008 ஆண்டு பிப்ரவரி 7 ல் தற்கொலை செய்து கொண்டார். இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

5. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடித்து வந்தவர் சாய் பிரசாத். இவர் வடகறி மற்றும் தெகிடி போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் படங்களில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

6. நகைச்சுவை நடிகை ஷோபனா சின்னத்திரையில் பணியாற்றி படிப்படியாக வெள்ளித்திரையில் நடித்தார். இவரது நகைச்சுவை நடிப்பு பலரது மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத நடிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இவர் பல திரைப்படங்ககளின் முலம் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி மக்களை திருப்தி படுத்தி வந்தார்.

7. வைஷ்ணவி இவர் பல படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்துள்ளார் இவர் விசில், காதல், சடுகுடு மற்றும் மௌனம் பேசியதே ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் தொடர்ந்து ஹீரோயினுக்கு தோழியாக நடித்து வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. இவரைப் போன்று சில பிரபலங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அவர்கள் ஜெயலட்சுமி, உதய்கிரண் மற்றும் பரத் ஷா போன்றோர் ஆவர்.

Leave a Comment