தமிழில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகிறது ஆனால் அத்தனை படங்களும் வெற்றி பெருகின்றனவா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும், ஆனால் நல்ல கதை உள்ள திரைப்படத்திற்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் தமிழில் வெளிவரும் திரைப்படங்கள் மீது ரசிகர்கள் பல விமர்சனங்களை வைக்கிறார்கள் ஏனென்றால் புதிதாக வெளியாகும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளை பார்த்தாள் அந்த திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது இந்த திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என விமர்சனம் கூறுகிறார்கள்.
அதேபோல் சில திரைப் படங்களைப் பார்த்தால் அப்படியே வேறு படத்தின் காட்சிகள் போலவே இருக்கும், அந்த வகையில் கொரியன் திரைப்படத்திலிருந்து காப்பியடித்து எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.
தெய்வத்திருமகள் – I Am சாம், அன்பே சிவம் – planes trains and automobiles, அவ்வை சண்முகி – madame doubtfire, அருணாசலம் – richard pryor brewster’s millions, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – sense and sensibility, ஆயிரத்தில் ஒருவன் – கேப்டன் பிளட், அபியும் நானும் – Father Of the Bride , விசில் – urban legend.