தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரையிலும் அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அத்தகைய படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதன் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் ரஜினி ,அஜித் ,விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் வெகு விரைவிலேயே நடித்தார்.
இதன் மூலமாகவே அவர் தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகளில் முதன்மையாக காணப்படுகிறார் அது மட்டுமல்லாமல் தற்போது அவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ற பட்டத்தை தக்க வைத்து தனக்கென ஒரு பாதையில் பயணித்து வருகிறார். தற்பொழுது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுபோல தமிழ் சினிமாவில் காமெடியானும்,நடிகருமான ஆர் கே பாலாஜி அவர்கள் இயக்கும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் நயன்தாரா அவர்கள் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இதுவே அவருக்கு முதல் முறையாகும் இப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பல படங்கள் ott யில் வெளியாகி வருகிறது என்பது நாம் அறிந்ததே அதுபோல மூக்குத்தி அம்மன் படம் ott யில் வெளியாகும் என பலர் கூறி வந்தனர் ஆனால் அதற்கு ஆர்ஜே பாலாஜி ott யில் வெளியாகாது என தெரிவித்தார் இப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என கூறியிருந்தார் மேலும் அவர் நயன்தாரா பற்றிய அவர் கூறியுள்ளார்.
நான் வேலை செய்த நடிகைகளே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான் நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவார். ஆணாதிக்கம் அதிகம் உள்ள சினிமா துறையில் தற்போது அவர் NO.1 நடிகையாக இருக்க இதுவே காரணம் என கூறிப்பிட்டார் ஆர் ஜே பாலாஜி.