உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே விக்ரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். தனது ஆசை நாயகன் கமல் தான் என்பதை லோகேஷ் கனகராஜ் பல மேடைகளில் சொல்லி உள்ளார்.
அதனால் விக்ரம் படத்தை கமலுக்கு ஏத்தமாதிரி சிறப்பாக கொடுக்க அவருக்கு இணையாக மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் ஒவ்வொருவராக தட்டி தூக்கினார் அந்த வகையில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற நடிகர்களை களமிறங்கினார் அதோடு மட்டுமல்லாமல் பல புது நடிகர், நடிகைகளுக்கும் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து உள்ளார்.
குறிப்பாக புதுமுக நடிகைகள் ஏராளமாக நடிக்கின்றனர் அந்தவகையில் VJ மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் போன்றோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்து இழுக்க படக்குழு புரமோஷன் வேலைகளில் தீவிரமாக செய்து வருகிறது.
மேலும் சிங்கிள் ட்ராக், படத்தின் டிரைலர், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விக்ரம் திரைப்படம் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது அதன் பார்கையில் கேரளாவில் விக்ரம் திரைப்படம் சுமார் 7 கோடிக்கு வியாபாரம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகிறது.
கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை விட அதிகமாக விக்ரம் திரைப்படம் கேரளாவில் அதிக வியாபாரத்திற்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கமல் சமீபகாலமாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவரது மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது அதற்கு எடுத்துக்காட்டு இது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.