திரையுலகில் உண்மையாக திருமணம் செய்துகொண்ட பல நடிகர், நடிகைகள் ஒன்றினைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் எந்தெந்த நடிகர் நடிகைகள் எந்தெந்த படங்களில் ஒன்று இணைந்து நடித்துளளார்கள் என்பதை தற்போது காண்போம்.
பார்த்திபன் சீதா- பார்த்திபன் சீதா இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் 1989 புதியபாதை.
சூர்யா,ஜோதிகா – சூர்யா, ஜோதிகா இவர்கள் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் 1999இல் பூவெல்லாம் கேட்டுப்பார் இதனையடுத்து 2000 ஆண்டில் உயிரிலே கலந்தது, 2003ஆம் ஆண்டில் காக்க காக்க, 2006ம் ஆண்டில் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
கமல், கௌதமி- கமல், கௌதமி இருவரும் முதலில் 1992இல் தேவர்மகன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக 1993இல் நம்மவர், 2015ஆம் ஆண்டில் பாபநாசம் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
பாக்யராஜ், பூர்ணிமா ஜெயராம் – இவர்கள் முதலில் 1982-ல் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர். அதன்பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.
அஜித்குமார், ஷாலினி – இவர்கள் 1999இல் அமர்க்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.
சுரேஷ் மேனன், ரேவதி – இவர்கள் 1993இல் புதிய முகம் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இவர்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
சரத்குமார், ராதிகா – இவர்கள் 1994இல் நம்ம அண்ணாச்சி என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். இதனையடுத்து 1997இல் சூரியவம்சம் திரைப்படத்தில் நடித்திரந்தனர்.
ரஞ்சித், ப்ரியா ராமன் – இவர்கள் 1999இல் நேசம் புதுசு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இதன் பிறகு எந்த ஒரு படத்திலும் இவர்கள் ஒன்றாக நடிக்கவில்லை.
ராஜகுமாரன், தேவயானி – இவர்கள் 2013ஆம் ஆண்டில் திருமதி தமிழ் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள். அதன்பிறகு இவர்களும் வேறு எந்தப் படத்திலும் ஒன்றிணைந்து நடிக்கவில்லை.
ராம்கி, நிரோஷா – இவர்கள் ஆயிரத்து 1998ஆம் ஆண்டில் பறவைகள் பலவிதம் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்.
விஜயகுமார், மஞ்சுளா – இவர்கள் 1991இல் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் ஒன்றிணந்து நடித்துள்ளார்கள்.
கார்த்திக், ராகினி – கார்த்திக், ராகினி இவர்கள் 1979இல் சோலைக்குயில் திரைப்படத்தில் ஒன்று இணைந்து நடித்துள்ளார்கள்.
ஜெமினி கணேசன், சாவித்திரி – இவர்கள் ஒன்றிணைந்து நடித்த திரைப்படம் ஆயிரம் ரூபாய் இத்திரைப்படம் 1964ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இதனையடுத்து 1961ஆம் ஆண்டில் பாசமலர் என்ற இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள்.
ரவிச்சந்திரன், ஷீலா – இவர்கள் 1965ஆம் ஆண்டில் இதய கமலம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள்.
எஸ்எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி – இவர்கள் 1965ஆம் ஆண்டில் காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்திருந்தார்கள்.
ஏவி.எம் ராஜன், புஷ்பலதா- இவர்கள் 1967இல் கற்பூரம் என்ற திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள்.
எம்ஜிஆர், ஜானகி – இவர்கள் 1948இல் மோகினி திரைப்படத்தில் ஒன்றிணைந்து நடித்துள்ளார்கள்.