சினிமா பிரபலங்கள் வேண்டாம் என டாக்டர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர் நடிகைகள்.! இதோ முழு லிஸ்ட்

tamil-actress-and-actress-marriage-doctor
tamil-actress-and-actress-marriage-doctor

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் யார் யாரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஏனென்றால் அது அவர்களின் விருப்பம் அந்த வகையில் இயக்குனர்களாக இருக்கட்டும், ஒரு டைரக்டராக இருக்கட்டும், புரொடியூசராக இருக்கட்டும் அல்லது ஒரு ஹீரோ ஹீரோயினை திருமணம் செய்து கொள்வதாக இருக்கட்டும் அவர்களின் இஷ்டத்திற்கு திருமணம் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் டாக்டர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார் என்று தற்போது காண்போம்.

விமல் – இவர் களவாணி திரைப்படத்தில் வர மாதிரி காதலிச்சி டாக்டர் அக்ஷயா என்பவரை 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அக்ஷயா வீட்டில் ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ளவில்லை வேற வழி இல்லாமல் அக்ஷயா வீட்டை விட்டு ஓடிவந்து விமலை திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள்.

பரத் – நடிகர் பரத் 2013 ஆம்ஆண்டில் செப்டம்பர் மாதம் ஜெயஸ்ரீ என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு பேருமே சின்ன வயதிலிருந்தே நண்பர்களாக இருந்து அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

யோகி பாபு – நடிகர் யோகிபாபு ரொம்பவே பிரபலமாகிக் கொண்டு வருகிறார். இவர் ஒரு நல்ல காமெடி நடிகர் தற்பொழுது திரையுலகிற்கு வெளிவரும் படங்களில் இவர் இல்லாமல் எந்த ஒரு படமும் இல்லை ஏனென்றால் தற்போது அந்த அளவிற்கு திரையுலகில் வளர்ந்துள்ளார். யோகி பாபு இந்த வருடம் பிப்ரவரி மாதம் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி மஞ்சு பாரதியும் ஒரு டாக்டர் தான்.

ஏஎல் விஜய் – இயக்குனர் ஏ எல் விஜய் 2004ஆம் ஆண்டில் நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன் பிறகு ஏ எல் விஜய் 2019ஆம் ஆண்டில் ஜூலை மாதம் டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகனும் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கருப்பு – 2010ஆம் ஆண்டில் டாக்டர் சங்கீதாவை இவரின் சொந்த ஊரில் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் ரொம்பவே பிசியாக இருந்து வருகிறார்.

கோபிகா – நடிகை கோபிகா சினிமாவில் 4 வகுப்பு ஸ்டூடண்டாக தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஆட்டோகிராப் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். 2008ஆம் ஆண்டில் ஜூலை மாதம் அஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கோபிகா.இவரின் கணவர் அயர்லாந்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவருக்கு ஒரு மகளும் ,ஒரு மகனும் உள்ளார்கள்.

மானு – நடிகை மானு காதல் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டுவிட்டு பரதநாட்டியத்தில் கவனம் செலுத்தி வந்தார். இவர் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சரண்யா மோகன் – நடிகை சரண்யா மோகன் யாரடி மோகினி என்ற திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தங்கச்சியாக நடித்து பிரபலமானார். 2015ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். ஆனந்த பத்மநாதன் என்ற மகனும் அன்னபூரணி என்ற மகளும் உள்ளார்கள்.

மாதுரி – பாலிவுட் நடிகை மாதுரி தமிழ் சினிமாவில் இன்ஜினியர் படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்து வந்தார். ஆனால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு 1999ஆம் ஆண்டில் ஸ்ரீராம் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள்.