திரை உலகில் பயணிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா இப்போ கூட விக்கி – நயன்தாரா என பலர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர்.
வாழ்க்கையை அனுபவிப்பதுடன் மட்டுமல்லாமல் சினிமாவுக்கு என நேரத்தை ஒதுக்கியும் அழகாக காசு பார்த்து வருகின்றனர். ஒரு சிலருக்கு வாழ்க்கை நன்றாக அமைந்து விடுகிறது ஒரு சிலரோ விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர் அந்த வகையில் 2022-ல் விவாகரத்து பெற்ற நடிகர் – நடிகைகள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
1. தனுஷ் – ஐஸ்வர்யா : தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தான் தனுஷ் . இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் 14 வருடங்கள் வாழ்க்கையை சூப்பராக வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த ஜனவரி மாதம் சில பிரச்சனைகள் காரணமாக தங்களது விவாகரத்தை அறிவித்தனர் அது பெரிய அளவில் பேசப்பட்டது.
2. பாலா – முத்து மலர் : இயக்குனர் பாலா தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இப்பொழுது கூட நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்னும் படத்தை எடுத்து வருகிறார். இயக்குனர் பாலா முத்துமலர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த இவர்கள் சில பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு விவாகரத்தை பெற்று பிரிந்து கொண்டனர்.
3. டி. இமான் – மோனிகா : ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். தொடர்ந்து சினிமாவில் சிறப்பாக ஓடும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் விவாகரத்து பெற்றார். இவர்களது விவகாரம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.