ரஜினி, அஜித், விஜய் இயக்குநர்கள் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம்.! இதொ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ajith-vijay-rajini
ajith-vijay-rajini

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னணி இயக்குனர்கள் இணைந்து ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் என்பதை அடிக்கடி நான் சமூக வலைதளத்தில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர்களை இயக்கிய முன்னணி இயக்குனர்கள் இணைந்து விக்டிம் என்ற புதிய ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான 4 இயக்குனர்கள் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டிம் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி, காலா திரைப்படங்களை இயக்கிய பா ரஞ்சித் மற்றும் அஜித் நடிப்பில் வெளியாகிய மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, விஜய் நடிப்பில் வெளியாகிய புலி திரைப்படத்தை இயக்கிய சிம்புதேவன் ஆகிய  இயக்குனர்கள் இயக்க இருக்கிறார்கள் இவர்களுடன் இணைந்து எம் ராஜேஷ் அவர்களும் இந்த திரைபடத்தில்  இணைந்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களான 4 இயக்குனர்கள் இயக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திலும் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

victim
victim