சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் புகுந்து விளையாடிய தமிழ் பிரபலங்கள்:-

actor-actress
actor-actress

சினிமாவில் நாம் அனைவரையும் மகிழ்வித்து மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வந்துள்ளனர். அவர்களுடைய ஆதரவை வைத்து அரசியலிலும் கால் தடத்தை பதித்த சினிமா பிரபலங்கள் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

எம் ஜி ராமச்சந்திரன் :- ஒரு காலகட்டத்தில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் எம் ஜி ராமச்சந்திரன். இவர் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற பிறகு அரசியலிலும் தனது கால் தடைகளை பதித்து ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்தவர். மூன்று முறை தொடர் முதலமைச்சராக தமிழகத்தில் பணியாற்றியுள்ளார். அதுபோக பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா:-  இவர் தெய்வமகன் அடிமைப்பெண் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான. பின்னர் இவரும் அரசியலில் புகுந்து தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.

விஜயகாந்த்:- சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் நடிகர் விஜயகாந்த். மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் தமிழ் திரைப்படம் நடிகர் சங்கத்தில் தலைவராக பணியாற்றி தமிழ் திரையுலகின் கடன்களை அடைத்தவர். மேலும் அரசியலில் ஆர்வம் இருந்ததால் தனக்கென ஒரு தனி கட்சியை தொடங்கி பணியாற்றி வருகிறார்.

சீமான்:- சினிமாவில் பல சமுதாயத்திற்கு தேவையான வசனங்கள் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் பிரபலமானவர் நடிகர் சீமான். இவர் தற்போது நாம் தமிழர் கட்சி என்ற கட்சியை தொடங்கி அரசியலில் பணியாற்றி வருகிறார்.

சரத்குமார்:- 90களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர்தான் நடிகர் சரத்குமார். இவர் நடிகராக நடித்து புகழ்பெற்ற பின்னர் அந்த புகழை கொண்டு அரசியலிலும் இணைந்து பணியாற்றி வெற்றி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது சரத்குமார் அவர்கள் தமிழகத்தில் அரசியல்வாதியாகவும் நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.

நெப்போலியன் :- தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து தற்போது குணச்சித்திரங்களாக நடித்து வருபவர் நடிகர் நெப்போலியன் இவர் இன்று வரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் அரசியலிலும் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் வி சேகர் :- 90களில் பிரபலமான நடிகராக பணியாற்றிய இவர் பின்னர் அரசியலில் இணைந்துள்ளார். மேலும் நடிகர் எஸ் வி சேகர் அவர்கள் பேசும் பேச்சு அனைத்தும் சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கருணாஸ்:- காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் குணசத்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார் அந்த புகழை வைத்து தற்போது அரசியலிலும் புகழ் பெற்றதாக இருந்து வருகிறார்.

ராதாரவி:- திரைப்படங்கள் மற்றும் திரை உலக வட்டாரங்களை பற்றி சர்ச்சையாக பேசி புகழ் பெற்றவர் தான் நடிகர் ராதாரவி. இவர் அரசியலிலும் சர்ச்சையாக பேசி பிரபலமாகி உள்ளார்.

குஷ்பூ:- 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர்தான் நடிகை குஷ்பு இவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் புகுந்து தற்போது முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன்  :- தமிழ் சினிமா உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன். இவர் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். பின்னர் தற்போது மக்கள் நீதி மையம் என்ற கட்சியினை துவங்கி தமிழகத்தில் பணியாற்றி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் :- ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தான் உதயநிதி ஸ்டாலின். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ஒரு சில திரைப்படங்களின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார் அந்த வகையில் சமீபத்தில் இவர் கைப்பற்றிய திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சில திரைப்படங்களின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி வருகிறார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பணிகளையும் செய்து வருகிறார்.