உலக நாடுகளையே நடு நடுங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ், இந்த வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது, முதலில் சைனாவில் தொடங்கி இத்தாலி அமெரிக்கா, ஈரான், ஈராக் என 160க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது, அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த கொரோனா வைரஸ் மக்களிடம் பரவாமல் இருக்க பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
144 தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள், இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் தினக்கூலி செய்பவர்களும் தொழிலாளிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல முன்னணி நடிகர்கள் தானாகவே முன்வந்து பணம் உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகரான பிரபாஸ் நாலு கோடி கொடுத்து உதவியுள்ளார் அதுமட்டுமில்லாமல் பவன் கல்யாண் இரண்டு கோடியும், அல்லு அர்ஜுன் 1.5 கோடியும் சிரஞ்சீவி ஒரு கோடியும், மகேஷ்பாபு 75 லட்சத்தையும் ஜூனியர் என்டிஆர் 70 லட்சத்தையும், ராம்சரண் எழுவது லட்சத்தையும் தங்களது தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு கொடுத்துள்ளார்கள்.
அதேபோல் தமிழ் சினிமா நடிகர்கள் தானாகவே முன்வந்து உதவி செய்தவர்கள் இதோ அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சத்தையும் தனுஷ் 15 லட்சத்தையும், கமலஹாசன் மற்றும் சங்கர் ஆகியோர்கள் 10 லட்சத்தையும், லோகேஷ் கனகராஜ் 50 ஆயிரத்தையும் கொடுத்துள்ளார், அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஆகியோர்கள் தலா 10 லட்சத்தையும் கொடுத்துள்ளார்கள் மேலும் சில தயாரிப்பாளர்கள் பணமாகவும் பொருள் உதவியும் செய்து வருகிறார்கள்.