விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் புதிதாக தமிழ் சரஸ்வதி பேரில் புதிய கம்பனியை ஆரம்பித்துள்ளார். பல கஷ்டங்களுக்கு பிறகு தமிழும் சரஸ்வதியும் தொழிலை தொடங்கியுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வசந்தரா மாசமாக இருந்து வந்த நிலையில் அவர் சரஸ்வதியிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் தெரியாமல் மாடி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து விடுகிறார்.
சத்தம் கேட்டவுடன் பதறிப்போன சரஸ்வதி திடீரென வீட்டிற்கு வருகிறார் அங்கு வசுந்தரா கீழே விழுந்து கிடக்க மற்றவர்கள் யாரும் வீட்டில் இல்லை எனவே உடனே சரஸ்வதி வசந்தராவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்கிறார். பிறகு மருத்துவமனையில் பிளட் வேண்டும் என கேட்க சரஸ்வதி தன்னுடைய இரத்தத்தை தருகிறார்.
இவ்வாறு இதன் மூலம் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் வசுந்தரா பிழைத்துக் கொள்ள குழந்தையும் பிறந்து விடுகிறது. எனவே சந்திரகலா, கோதை என அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் மேலும் சந்திரகலா குழந்தையை சரஸ்வதியின் கையில் கொடுத்து தனது மகளைக் காப்பாற்றியதற்கு நன்றி கூறுகிறார்
ஓரமாக நின்று கொண்டிருந்த கோதை சரஸ்வதியை நினைத்து கண்கலங்குகிறார் இப்படி அனைவரும் சரஸ்வதியை பார்க்க இந்த நேரத்தில் கார்த்திக் திடீரென கையெழுத்து கும்பிட்டு நன்றி கூறுகிறார். இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலைகளில் இந்த சீரியலில் வசந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திடீரென விலக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு இந்த சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் வசுந்தரா கேரக்டர் தான் இவ்வாறு திடீரென இந்த சீரியலில் இருந்து விலக்குவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.