சம்பளத்தை உயர்த்திய தமிழ் நடிகைகள் : புதிய சம்பள பட்டியலை பார்த்து ஷாக்காக்கும் ரசிகர்கள்.?

actress
actress

திரை உலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் நடிகைகள் பலரும் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே செல்வது வழக்கம் அந்த வகையில் தென்னிந்திய திரை உலகில் உச்சநட்சத்திர நடிகைகளாக இருக்கும் பலரும் தற்பொழுது இருக்கும் சூழலில் கூட சம்பளத்தை உயர்த்தி உள்ளனர்.

அந்த வகையில் தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் பலரும் தங்களது சம்பளத்தை உயர்த்தி உள்ளனர் அவர்களின் லிஸ்ட் தற்போது பார்ப்போம். நயன்தாரா ஒரு படத்திற்காக சுமார் 4 அல்லது 5 கோடி சம்பளமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதுபோல அனுஷ்காவும் 3 கோடி சம்பளம் வாங்குகிறார். திரையுலகில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக வளர்ந்து வரும் நடிகை சமந்தா தற்போது ஒரு திரைப்படத்திற்காக 3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. தற்போது சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

nayanthara and trisha
nayanthara and trisha

மேலும் வெப் சீரிஸ்இன் ஃபேமிலி மேன் 2 என்ற தொடரிலும் தற்போது நடித்து முடித்துள்ளார் இதற்கும் அதே சம்பளம் அல்லது அதைவிட உயர்ந்த சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் பேசுகின்றனர் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

keerthi suresh
keerthi suresh

கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்திற்கு 3 கோடி கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை காஜல் அகர்வால் ஒரு திரைப்படத்திற்காக 2 கோடி சம்பளம் வாங்குகிறார் அதுபோல திரிஷா ஒரு திரைப்படத்திற்கு 2 கோடி நடிகை தமன்னா, சுருதிஹாசன் ஆகியோர் 1 கோடியே 50 லட்சம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.