வெளிநாட்டு மாப்பிளை தான் வேணும் என திருமணம் செய்துகொண்ட நடிகைககள்.! அட இவருமா அப்படி.!

tamil-actress

சினிமா துறையில் யார் யாரை திருமணம் செய்து கொள்வார் என்றே தெரியாது ஒரு நடிகர் நடிகையை திருமணம் செய்து கொள்வார் அல்லது இயக்குனர் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்வார்கள் இது போன்று பல திருமணங்கள் நடந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பிறந்து வெளிநாட்டு நபரை திருமணம் செய்து கொண்ட நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஸ்ரேயா இவர் அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி போன்ற தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா இவருக்கும் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரே கோஸ்யூ என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி திருமணம் நடந்தது. ஸ்ரேயா தற்போது ரஷ்யாவில் தான் இருந்து வருகிறார்.

shreya
shreya

நடிகை மாதவி 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இவருடைய உண்மையான பெயர் மகாலட்சுமி சினிமாவிற்காக மாதவி என்று பெயர் மாற்றிக்கொண்டார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தில்லுமுல்லு, கமல்ஹாசனுடன் இணைந்து ராஜபார்வை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ராக் ஷர்மா என்பவரை ஆயிரத்து 996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சுருதிஹாசன் இவர் கமல்ஹாசனின் மூத்த மகள், இவர் மல்டி டேலண்ட் நடிகை என்றும் சொல்லலாம். இவர் தமிழில் ஏழாம் அறிவு, பூஜை,3, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மைக்கேல் பார்சல் என்பவரை தற்போது காதலித்து வருகிறார். கூடிய விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரியங்கா சோப்ரா இவர் தளபதி விஜயுடன் இணைந்து தமிழன் என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்துள்ளார்.  இந்த திரைப்படம் 2002 இல் வெளியானது. இவருக்கும் நிக் ஜோனஸ் என்பவருக்கும் 2018ல் திருமணம் ஆனது. இவர் 2002ஆம் வருடம் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

priyanka chopra

நடிகை ராதிகா ஆப்தே இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கும் பெனடிக்ட் டைலர் என்பவருக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.