Tamil actress who acts as a call girl in movie: சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை எற்று கச்சிதமாக நடிக்க வேண்டும். அப்பதான் முன்னணி நடிகையாக சீக்கிரம் வளர முடியும், ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடிக்க முடியும்.
இப்படி வித்தியாசமான கதாபாத்திரமான விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளின் லிஸ்டை இங்கே பார்க்கலாம்.
ஸ்ரீபிரியா – கார்த்திக் நடிப்பில் உருவாகிய நட்பு என்னும் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா, ராதா என்ற பெயரில் விலைமாதுவாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகை சரண்யா- நடிகை சரண்யா தற்போது தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர். அதிலும் கமலஹாசனுடன் நாயகன் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்து இருந்தார். அதனால் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது, அந்த திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் விலைமாதுவாக நடித்து இருப்பார்.
சங்கீதா- சங்கீதா 2000ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தனம் எனும் படத்தில் நடிகை சங்கீதா விலைமாதுவாக நடித்து இருந்தார். ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை.
நடிகை சினேகா- அன்றிலிருந்து இன்றுவரை கேங்ஸ்டார் திரைப்படம் என்றாலே நம் நினைவுக்கு வருவது செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகிய புதுப்பேட்டை திரைப்படம் தான், இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து சினேகா நடித்திருப்பார். சினேகா, கிருஷ்ணகிரி என்ற கதாபாத்திரத்தில் விலைமாதுவாக நடித்து இருந்தார், இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது.
ரம்யா கிருஷ்ணன் – நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிகையாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும், கவர்ச்சி நாயகியாகவும் நடித்து வந்தவர். இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் மேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் வைரல் ஆனது.
அனுஷ்கா ஷெட்டி- சிம்பு, பரத் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வானம். இந்த திரைப்படத்தில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் விலைமாதுவாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்தார், இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனுஷ்காவிற்கு அவரே எதிர்பார்க்காத அளவிற்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது.