பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்ததுதான் நாயகி சீரியல். இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நடிகை தான் நமது வித்யா பிரதீப்.
பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் எவரும் வெள்ளித்திரைக்கு செல்வது மிகவும் கடினமான செயல் அது நடக்கவும் நடக்காது என்பதை மாற்றும் வகையில் சின்னத்திரையில் இருந்து சந்தானம் சிவகார்த்திகேயன் பிரியா பவானி சங்கர் வாணிபூஜன் போன்றவர்கள் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பை முடித்தது மட்டுமில்லாமல் மருத்துவத் துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்று வந்தவர். இந்நிலையில் நமது நடிகைகள் மாடலிங் துறையில் மீது அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார்.
இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அருண்விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் இவர் பிரபலமாகிவிட்டார்.
மேலும் இவரை தைரியமான பெண்ணாகவும் புது நடிகையாகவும் காட்டியது நாயகி சீரியல் தான் இந்த நாயகி சீரியலில் நடித்ததன் பிறகு இவருடைய ரேஞ்சே மாறிவிட்டது இதனை தொடர்ந்து முழுமையாக வெள்ளித்திரை நாயகியாகவும் கால் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்.
இவ்வாறு பிரபலமான நடிகை தமிழில் பல நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் நமது நடிகை மாலையும் கழுத்துமாக தாலியோடு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.