20 வருடங்கள் கழித்து தனது தங்கையை பற்றி உருக்கமான தகவலை பதிவிட்ட நடிகை சிம்ரன்.!

simran
simran

ஏராளமான நடிகைகள் வயதானாலும் கூட மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கூறும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் தற்போது சினிமாவில் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சிம்ரன்.

இவர் தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார் அந்த வகையில் அஜித், விஜய்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.அந்த வகையில் துள்ளாத மனமும் துள்ளும்,வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்கள் தற்போது வரையிலும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை சிம்ரன் தனது தங்கையும் நடிகையுமான மோனல் பற்றிய உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “நீ இப்போது என்னுடன் இல்லை, ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று, இருபது வருடங்கள் கடந்தாலும் என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறாய். நாங்கள் அனைவரும் உன்னை எப்பொழுதும் மிஸ் செய்கிறோம், மோனு ” என பதிவிட்டுள்ளார்.

சிம்ரனை போலவே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகை மோனல். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது ரூம் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரைவுலகம் என அனைவரும் அதிர்ச்சியில் முழ்க வைத்தது.