நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் துணை நாயகியாக நடித்து வருபவர் இவர் முதன்முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் பரோட்டா சூரிக்கு ஜோடியாக நடித்த பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து சதீஷின் திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த ஷாலு ஷம்மு சமீபகாலமாக சரியான வாய்ப்பு அமையாமல் இருந்து வருகிறார்.
பட வாய்ப்பு இல்லை என்றால் நடிகைகள் என்ன செய்வார்களோ அதைத்தான் ஷாலு ஷம்முவும் செய்துவந்தார், அதாவது சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.
அதன்மூலம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை, திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அதனால் வெளியாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடும் ஷாலு ஷம்மு நீண்ட நாட்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தார். அதனால் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு உளளார் அதை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சிக்கும் குட்பை சொல்லி விட்டீர்கள் இப்படி குடும்ப குத்து விளக்கு போல் போஸ் கொடுத்து உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.