வச்ச கண் எடுக்காமல் பார்க்கும்படியான உடையில் ராணா திருமணத்தில் கலந்து கொண்ட சமந்தா.! புகைப்படம் உள்ளே

samantha -tamil360newz1
samantha -tamil360newz1

Samantha attends Rana wedding : நம்மளுடைய தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் படி திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சி என்றாலே பட்டுப்புடவை தான் பிரபலம், பெண்கள் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு நகைகளை அணிந்துகொண்டு தலைநிறைய பூ வைத்துக்கொண்டு சும்மா கலக்கலான ஹேர் ஸ்டைலில் இருப்பார்கள்.

ஆனால் சமீபகாலமாக இந்த ட்ரெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது இதற்கு மிக முக்கிய காரணம் என்றால் நடிகைகளும் தான் ஒரு காரணம், ஏனென்றால் நடிகைகள் எப்படி உடை அணிகிறார்கள் அதேபோல்தான் பெண்களும் உடையணிய ஆசைப்படுகிறார்கள்.

இந்தநிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் ராணாவின் திருமணம் நடைபெற்றது, இந்த திருமணத்தில் கொரோனா காரணமாக மிக முக்கிய பிரபலங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள், அந்த முக்கிய பிரபலங்களில் சமந்தாவும் ஒருவர், நடிகை சமந்தா அணிந்து வந்த உடைதான் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை சமந்தா ராணாவின் திருமணத்தில் சந்தேரி சில்க் காட்டன் சேலை அணிந்து மிக எளிமையான உடையில் கலந்துகொண்டுள்ளார். அவர் உடுத்தியிருந்த உடை நீல நிறத்தில்  எந்த ஒரு கிரான்ட் டிசைன்களும் இல்லாமல் எளிமையாக இருந்தது அந்த கைத்தறி காட்டன்.

ஆனால் சமந்தா கழுத்தில் அதிகளவில் நகை அணிந்திருந்தார் புடவைக்கு ஏற்ற வாறு கழுத்தை ஒட்டிய வைர நகைகளை அணிந்து இருந்தார், ஆனால் கையில் எதுவும் அணியவில்லை, அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா புடவை போலவே அலங்காரத்திலும் எளிமையாக இருந்தார்.

மிகவும் எளிமையாக இருந்தாலும் அழகாக இருந்தார் சமந்தா, எளிமையாக இருந்தாலும் அவரது தோற்றம் மிகவும் ரிச் ஆக இருந்தது.

rana
rana wedding

இதோ இணையதளத்தில் வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்.

samantha -tamil360newz
samantha Rana wedding -tamil360newz