செய்தி வாசிப்பாளராக சின்னத்திரை மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் நடித்து வரும் பொழுது மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். பின்பு தமிழில் முதன்முதலாக வைபவ் நடிப்பில் வெளியாகிய மேயாத மன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் மேலும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய ‘மாபியா’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படி வந்த வேகத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
தற்பொழுது இவர் குருதி ஆட்டம், ஓ மனபெண்ணே, பூமி, களத்தில் சந்திப்போம், கசட தபர, வான், இந்தியன் 2, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பூமி, களத்தில் சந்திப்போம், ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
மேலும் அசோக் செல்வன் திரைப் படத்திலும் கமிட்டாகியுள்ளார் பிரியா பவானி சங்கர், இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்து தொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிட்டு விடுவீர்கள் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.