தனது அப்பாவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட வாரிசு நடிகைகள்.! கமல் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காத சுருதி ஹாசன்..

tamil actress
tamil actress

Tamil actress: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகள் மீது சர்ச்சைகள் இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் நடிகைகளும் சிலர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து வருகின்றனர். பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் பலரும் தங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் பொழுது தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட வேண்டும் என்பதினை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி வாரிசு நடிகைகளாக அறிமுகமான சில நடிகைகள் தங்களது அப்பாவின் மானத்தை காத்தில் பறக்க விட்டிருக்கும் நிலையில் அப்படிப்பட்ட நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

ராதிகா: நடிகை ராதிகா எம்.ஆர் ராதா அவர்களின் மகள் ஆவார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில் மீண்டும் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதா விஜயகுமார்: வனிதா செய்த பிரச்சனைகளால் விஜயகுமார் இவரை தண்ணி தெளித்து விட்டு விட்டார். அப்படி மூன்று பேரை திருமணம் செய்து கொண்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதன் பிறகும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரையும் பிரிந்து தற்பொழுது தனியாக தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

சுருதிஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பல திறமைகள் இருந்தாலும் கூட தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீப காலங்களாக தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் நிலையில் இதனால் கமலின் மொத்த பெயரும் டேமேஜ் ஆகியுள்ளது.

அதிதி சங்கர்: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அதிதியை படங்களில் நடிக்கவே கூடாது என கூறியிருந்த நிலையில் ஆனால் நான் நடித்தே ஆகுவேன் என பிடிவாதத்துடன் அதிதி சங்கர் நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்: சரத்குமாரின் உதவி இன்றி சினிமாவிற்கு அறிமுகமான வரலட்சுமி விஷாலை காதலித்து வந்த நிலையில் இது பிரேக்கப் ஆனது. இதனையடுத்து மேலும் ஏராளமான சிகிச்சைகளில் சிக்கி வருகிறார்.