முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்றவர்களை ஓவர்டேக் செய்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாரா, த்ரிஷா இருவருமே ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பார்கள் அதுவும் காதல் படங்கள் மற்றும் கெத்தாக இருப்பது போல் நடித்து இருப்பார்கள்.
ஆனால் தற்போது வளர்ந்து வரும் நடிகை எல்லாம் வித்தியாசமான கேரக்டரில் நடித்து பிரபலமடைந்து உள்ளார்கள். அதாவது எத்தனை படம் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதனை எப்படி உள்வாங்கி நடிக்கிறார் என்பது தான் மிகவும் முக்கியம்.
அந்தவகையில் சின்னத்திரையில் நடித்து பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர்,வாணிபோஜன் மற்றும் தனது அழகைப்பற்றி பலர் கேலி செய்து இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது விடா முயற்சியினால் சினிமாவில் வளர்ந்து உள்ளவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த மூன்று நடிகைகளும் நான் மற்ற நடிகைகளை விட அதிகப்படியான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா ஆகியோர்களை ஓவர்டேக் செய்து இந்த மூன்று நடிகைகளை விட தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்த மூன்று நடிகைகளும் கைவசம் வைத்துள்ள திரைப்படங்களின் லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்.
பிரியா பவானி சங்கர்: கசடதபற, குருதி ஆட்டம், ஓமன பெண்ணே, ஹாஸ்டல் மற்றும் பொம்மை ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். திரைப்படங்களை தொடர்ந்து பத்து தல, இந்தியன் 2, ருத்ரன், மற்றும் ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உள்ளிட்ட கிட்டத்தட்ட 9 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பூமிகா, திட்டம் 2, டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிட்சென், மோகன்தாஸ் மற்றும் துருவநட்சத்திரம் உள்ளிட்ட 6 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் லிஸ்டில் பெரும்பாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறும் வகையில் இருக்கும் படமாக அமைகிறது. எனவே ப்ரியா பவானி சங்கருக்கு அடுத்ததாக இவர்தான் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார்.
வாணி போஜன்: இவர் நடிப்பில் சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு பாயும்புலி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், தாள் திறவாய், விக்ரமின் 60வது படம், சூர்யாவுடன் ஒரு திரைப்படம் என ஆறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர்தான் சினிமாவில் முன்னணி நடிகைகளில் மூன்றாவது இடத்தைப் பெறுகிறார்.