படப்பிடிப்பில் கூட அந்த நடிகர் என்னை விட்டு வைக்கல அவ்வளவு கஷ்டப்பட்டேன்.! பகிர் கிளப்பிய கொழுக் மொழுக் நடிகை.

தமிழ் சினிமாவில் பொதுவாக அக்கட தேசத்தில் இருந்து வரும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பல நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் கொழுக் மொழுக் நடிகை.

இவர் பாடகியாகவும் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் முதல் முதலாக இவர் நம்பர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின்  பல திரைப்படங்களில் நடித்திருந்தார் கடைசியாக அரசியல் வாரிசு படத்திலும் மற்றும் ஒல்லி நடிகர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அதேபோல் தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது தமிழில் பெரிதாக பட வாய்ப்பு இல்லாததால் மலையாளத்தில் நடித்து வருகிறார். அதேபோல் கொழுக் மொழுக் நடிகை  நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு வெப் தொடர் அமேசான் பிரைமில் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொழுக் மொழுக் நடிகை தெலுங்கு சினிமாவில் எனக்கு இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் வரல ஆனால் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் முக்கியமாக தமிழ் நடிகர் ஒருவர் என்னை படபிடிப்பில் துன்புறுத்தினார் என பகிரங்கமாக கூறியுள்ளார்.

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் அந்த தமிழ் நடிகர் யார் என்று கூறுங்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.