Kasthuri : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை கஸ்தூரி. இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்தார். முதலில் படங்களில் நடிக்கும் பொழுது இழுத்து போட்டு தான் நடித்தார்.
அந்த வகையில் இவர் நடித்த ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ் பாட்டு போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறைய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அமைதிப்படை படத்தில் தொடங்கி இப்பொழுது வரை அவர் கிளாமரான கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட கஸ்தூரி சினிமாவையும் தாண்டி ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார் இப்படி பிஸியாக வரும் இவர் சமூக வலைதள பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அதுவும் இவர் வெளியிடும் புகைப்படங்கள்..
ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறும் அந்த அளவிற்கு கிளாமராக இருக்கும் அண்மையில் கூட இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிய அளவில் வைரலானது இந்த நிலையில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அவர் சொன்னது.. நான் என் அப்பாவுடன் நடிகர் சங்க விழாவுக்கு சென்று இருந்தேன்.
அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது அப்பொழுது ஒரு நபர் என்னுடைய பின்பக்கத்தில் கிள்ளினான். உடனே அவன் கையை மடக்கி முன் இழுத்து முறுகினேன் உடனே அவன் வலியால் சிஸ்டர் சிஸ்டர் மன்னிச்சிடுங்க என கட்டி துடித்தான் அது ஒரு மிகவும் மோசமான அனுபவம் என கஸ்தூரி கூறியுள்ளார்.