Gossip : சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது என புதுமுக நடிகைகள் தொடங்கி முன்னணி நடிகைகள் பலரும் பல வருடங்கள் கழித்து தற்பொழுது போல்டாக சொல்லி வருகின்றனர் அப்படித்தான் தெனிந்திய சினிமா உலகில் உயரமான நடிகைகளில் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் தமிழில் சின்ன சின்ன படங்களில் நடித்தார்.
அதில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது ஆனால் தமிழ் சினிமா தான் இவரை தூக்கி விட்டது. கௌதம் கார்த்தி உதயநிதி , எஸ் ஜே சூர்யா போன்றவர்களுடன் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார் திரையில் சூப்பரா ஓடிக் கொண்டிருக்கும் இவர் கவர்ச்சியையும் தாராளமாக காட்டினார்.
இதனால் அந்த உயரமான நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். தற்பொழுது கூட 2023 -ல் கைவசம் இரண்டு, மூன்று படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது எனக்கு 20 வயது இருக்கும் போது அது நடந்தது..
தொலைபேசி அழைப்பின் மூலம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யலாமா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அதன் அர்த்தம் அப்பொழுது புரிந்து கொள்ள முடியவில்லை சம்பளத்தில் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லுகிறார் என நினைத்தேன் இது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அப்பொழுது எனக்கு வயது 20 வயது என கூறினார். எனவே மேலாளர் அவரிடம் இதை பற்றி பேசுவார் என்று நான் அவரிடம் சொன்னேன், இது எனது ஊதியம் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டேன்.
அவர் வேறு வகையான அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுகிறார் என்பதை பின் உணர்ந்தேன். அந்த சம்பவத்திற்கு பிறகு தனிப்பட்ட முறையில் என் வாழ்நாளில் இது போன்ற சூழலை நான் சந்தித்தது இல்லை ஆனால் சிலர் பெண்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருப்பார்கள் அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம்.