1967ஆம் ஆண்டு இந்திய அரசியலால் சினிமாவை கௌரவப்படுத்த உருவாக்கப்பட்டது தான் தேசிய விருது. ஒரு ஆண்டில் இந்திய முழுவதும் வெளியாகிய படங்கள் மற்றும் அதில் பணியாற்றி உள்ள பிரபலங்கள் என பலரை தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிடப்படும் முக்கியமான ஒருவருக்கு இந்த விருதுநகர்.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு வரை ஆறு நடிகைகள் மட்டும் இந்த விருதினை பெற்றுள்ளனர். அவர்கள் எந்தெந்த திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வாங்கினார்கள் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
சரண்யா பொன்வண்ணன் :- 2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் சரண்யா பண்ணுவ அண்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
பிரியாமணி :- நடிகர் கார்த்தி அது அறிமுகமான பருத்திவீரன் என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி அவர்கள் பெற்றுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை பிரியாமணி.
அர்ச்சனா:- தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை அர்ச்சனா இவர் 1987 இல் வெளியான வீடு என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்றுள்ளார்.
சுஹாசினி :- நடிகர் சிவகுமார் நடிப்பில் வெளியான சிந்து பைரவி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்தான் சுகாசினி. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அதே சமயத்தில் 1985 ஆம் ஆண்டு இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
ஷோபா :- 1980 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷோபா. இவர் 1979 ஆம் ஆண்டு பசி என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
லக்ஷ்மி :- தமிழில் வெளியாகி பிரபலமான திரைப்படம் தான் சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படத்திற்காக லக்ஷ்மி அவர்கள் தேசிய விருது பெற்றுள்ளார். இப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா திரைப்படம் உலகில் இவர் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் தமிழில் தேசிய விருது பெற்ற நடிகைக்கான புகழையும் பெற்றுள்ளார்.
அபர்ணா பாலமுரளி :- 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளி அவர்கள் பெற்றுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் பணியாற்றிய 5 முக்கிய நட்சத்திரங்களும் தேசிய விருதை பெற்றுள்ளனர்.
லட்சுமி பிரியா சங்கரமௌலி :- கடந்த ஆண்டு நேரடியாக OTT தளத்தில் வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.