தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கதாநாயகன் என்ற திரைப்படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்பு ஏமாளி என்ற திரைப்படத்தில் 2018 ஆம் ஆண்டு நடித்தார் ஓரளவு ரசிகர்களிடையே பிரபலம் அடைய இந்த திரைப்படம் உறுதுணையாக இருந்தது. இதனைத்தொடர்ந்து நாகேஷ் திரையரங்கம், கி, அடுத்த சாட்டை, சுட்டு பிடிக்க உத்தரவு ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படங்கள் ஓரளவு பிரபலத்தை பெற்றுக்கொடுத்தது பின்பு ஜெய்யுடன் கேப்மாரி திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி நடித்துப் பார்த்தார். இந்தப் படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் இது அதுல்யா தானா என ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த திரைப்படம் அமைந்துவிட்டது. அந்த அளவு கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார்.
தற்போது இவர் வட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அவர் வெளியிடும் புகை படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது உண்டு.
இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் பல பிரபலங்கள் புத்தாண்டு வாழ்த்து கூறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அப்படித்தான் நடிகை அதுல்யா ரவியும் தலை நிறைய மல்லிகை பூ வைத்து வெட்கத்தால் முகம் சிவக்க புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.