நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் பாடிக்கொண்டே நடனம் ஆடும் திறமை கொண்டவர். இந்தநிலையில் ஆண்ட்ரியா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
அப்படியிருக்கும் நிலையில் சமீபகாலமாக ஆண்ட்ரியா மொக்கை திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது அதாவது ஒரு திரைப்படத்தில் மேலாடை இல்லாமல் ஒரு படத்தில் நடித்தால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைப்பதே கிடையாதாம்.
நடிகை ஆண்ட்ரியா விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை சொல்லப்போனால் உப்பு சப்பில்லாத கதாபாத்திரமாக அமைந்துவிட்டது. அதனால் அடுத்தடுத்து ஆண்ட்ரியாவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.
இந்த நிலையில் அடுத்ததாக மிஸ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் பிசாசு திரைப்படத்தை முழுமூச்சாக நம்பியிருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்பு அமையாது அதற்கு காரணம் வடசென்னை திரை படத்தில் அமீருடன் இணைந்து மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் மேலாடை இல்லாமல் நடித்தது தான் காரணம் கூறுகிறார்கள்.
சொல்லப்போனால் வடசென்னை திரைப்படத்திற்குப் பிறகு பிட்டு படத்தை விட மோசமான கதாபாத்திரம் ஆண்ட்ரியாவுக்கு அமைந்து வருகிறது. இதனால் ஆண்ட்ரியா மிகவும் அப்செட் ஆக இருக்கிறார். இந்த நிலையில் சினிமாவில் பார்த்து பார்த்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த எனக்கு இந்த நிலைமை என புலம்பு புலம்புன்னு புலம்பி வருகிறாராம்.
மேலும் ஆண்ட்ரியா அவள் திரைப்படத்திலும் கொஞ்சம் நெருக்கம் காட்டி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இனி சினிமாவில் நடிப்பதாக இருந்தால் நல்ல கதாபாத்திரத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என குறிக்கோளுடன் இருக்கிறாராம் அதனால் எவ்வளவு நாள் காத்து இருந்தாலும் பரவா இல்லை நல்ல கதை உள்ள திரைப்படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம்.