பொதுவாக நம் நாட்டில் ஏராளமான விளையாட்டு வீராங்கனைகள் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடந்து முடிந்த நிலையில் அந்த கால்பந்து போட்டியில் நட்சத்திர நாயகன் மெஸ்ஸிக்கு உலகமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபலம் ஒருவர் கல்லூரி காலத்தில் கால்பந்து வீராங்கனை என குறிப்பிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது தமிழ் சினிமாவில் தன்னுடைய ஒரே ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகை அதிதி பாலன். இவர் அருவி என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இந்நிலையில் தற்பொழுது இவர் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமந்தாவுடன் இணைந்து சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அருவி திரைப்படத்தில் ஒண்ணும் தெரியாத அப்பாவி பெண் போல் நடித்திருந்த நிலையில் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இவருக்கு லட்சக்கணக்கான பாலோசர்கள் உள்ளனர்.
எனவே இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுவது என்பது தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற முடிந்த நிலையில் நானும் கல்லூரி காலத்தில் ஒரு கால்பந்து வீராங்கனை தான் என்று குறிப்பிட்டு அது குறித்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு கல்லூரி காலத்தில் அதிதி பாலன் கால்பந்து வீராங்கனையாக இருந்திருப்பது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் முதல் சில பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.